சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 99 ஆயிரத்து 795 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 718 நபர்களுக்கும், பீகாரில் இருந்து சாலை வழியாக தமிழ்நாட்டிற்கு வந்த இரண்டு நபர்களுக்கும் என 720 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 33 லட்சத்து 37 ஆயிரத்து 947 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 27 லட்சத்து 26 ஆயிரத்து 917 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டன. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 8,244 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 758 நோயாளிகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்து வரும் எண்ணிக்கை 26 லட்சத்து 82 ஆயிரத்து 192 என உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 4 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் ஐந்து நோயாளிகளும் என ஒன்பது நோயாளிகள் இறந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இறந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்து 481 உயர்ந்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:
சென்னை - 5,58,034
கோயம்புத்தூர் - 2,50,179
செங்கல்பட்டு - 1,73,775
திருவள்ளூர் - 1,20,207
ஈரோடு - 1,06,315
சேலம் - 1,01,347
திருப்பூர் - 97,171
திருச்சிராப்பள்ளி - 78,450
மதுரை - 75,519
காஞ்சிபுரம் - 75,601
தஞ்சாவூர் - 76,102
கடலூர் - 64,399
கன்னியாகுமரி - 62,780
தூத்துக்குடி - 56,493
திருவண்ணாமலை - 55,187
நாமக்கல் - 53,494
வேலூர் - 50,194
திருநெல்வேலி - 49,655
விருதுநகர் - 46,396