தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் தவறான சிகிச்சை என புகார்.. பெண் குழந்தையுடன் போலீஸ் தந்தை திடீர் போராட்டம்! - Egmore Children Hospital

தனது மகளுக்கு எழும்பூர் குழந்தை நல மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டி தலைமை காவலர் ஒருவர் தலைமைச்செயலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

chennai
தவறான மருத்துவத்தால் குழந்தை பாதிப்பு

By

Published : Apr 13, 2023, 2:29 PM IST

தவறான மருத்துவத்தால் குழந்தை பாதிப்பு: அரசு மருத்துவத்தில் அலச்சியமா?... காவலர் போராட்டம்!

சென்னை: தலைமைச்செயலகம் வாயிலில் தலைமைக் காவலர் கோதண்டபாணி என்பவர், தன்னுடைய குழந்தைக்குத் தவறான சிகிச்சை அளித்ததில் வலது கால் ஊனமுற்றதால் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவர் எழிலரசி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுக்க வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளரைச் சந்தித்து மனு கொடுக்க வந்தவரைப் பார்க்க அனுமதிக்காததால், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார். தற்போது அந்த காவலர் விசாரணைக்காக B1 காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "தமிழ்நாடு காவல்துறையில் காவலராக பணியில் சேர்ந்து தற்பொழுது, ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறேன். நான் ஆவடியிலுள்ளiள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறேன். எனது வயது 10 குழந்தைக்குக் கிட்டத்தட்ட 3 வயது முதல் சிறுநீரக பிரச்சனை (Nephrology) காரணமாக அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, எழும்பூரில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ச் (Discharge) செய்யப்பட்டு அரசு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளைக் கடந்த 5 வருடங்களாக எனது மகள் உட்கொண்டு வந்துள்ளார். இந்த மாத்திரையின் எதிர்விளைவு காரணமான திடீர் என்று என் மகளுக்கு வலது பக்க கால் பாதத்தில் அரிப்பு ஏற்பட்டதின் காரணமாகக் கடந்த 18.10.2021-ல் காவல் ஆம்புலன்ஸ் மூலமாக அதே குழந்தைகள் நல மருத்துவமனையில் வெளி நோயாளியாகச் சிகிச்சை செய்யப்பட்டது.

அதன் பின்னர் உடனே வீட்டிற்கு அனுப்பப்பட்டாலும், மேலும் எனது மகளுக்குக் கால் அரிப்பு அதிகரித்ததால் 20.10.2021-ல் அதே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். பிறகு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு PT – INR (கல்லீரல், மண்ணீரல்) பிரச்சினையைக் கூட கண்டறியாத மருத்துவரின் தவறான கணிப்பின் (Wrong Diagonise) காரணமாகத் தவறான மாத்திரைகளை அளித்துள்ளனர்" என்றார்.

"அவ்வாறு வழங்கப்பட்ட மாத்திரை உட்கொண்டதால் பின்விளைவுகளால் ஏற்பட்டதன் காரணமாக என் மகளை தங்கள் மருத்துவர் உதவியுடன் ஆம்புலன்சில் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு Vascular-பிரிவில் அக்டோபர் 21-ல் அனுமதிக்கப்பட்டது. அங்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் என் மகளுக்கு இரத்த உறைவு (Blood Clot) எனத் தவறாகக் கணித்தனர்.

அதன் விளைவாக மீண்டும் தவறான மருந்துகள் கொடுக்கப்பட்டதால் எனது மகளின் பாதம் கருகியதுடன், உடலில் உள்ள இரத்தம் கெட்டுப்போனது. அப்பொழுது இதனை உடனடியான அறித்த மருத்துவர் திரு.வெங்கடேசன் (PT - INR) தவறான சிகிச்சை அளித்ததை அறிந்து குழந்தையை உடனடியாக Discharge செய்து குழந்தைகள் நல மருத்துவமனை எழும்பூரில் மேற்கண்ட மருத்துவர் மூலமாக அக்டோபர் 31-ல் சேர்க்கை போடப்பட்டது.

பின்னர் அங்குப் பெற்றோராகிய எங்களின் அனுமதியின்றி எனது மகளுக்கு இரத்த சுத்திகரிப்பு (Dialysis) செய்யப்பட்டதன் விளைவாகக் குழந்தைக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. இதனைக் கண்டறியாத மருத்துவர் கால்சியம் குறைபாடு என கருதினார்கள். ஆனால் வலிப்பு தொடர்ந்து ஏற்படவே அவசர சிகிச்சை (ICU) பிரிவில் அனுப்பப்பட்டு அனைத்து விதமான பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

பின் பரிசோதனை அறிக்கை பெறுவதற்குள் மூளைக்காய்ச்சலுக்கான மருந்து ஏற்றப்பட்டு எனது மகளின் இடது கை விழப்பட்டு சிகிச்சையின் போதே கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். இவை அனைத்தும் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சிய போக்கையும், சிகிச்சையில் அவர்களது மெத்தனத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. அவ்வாறு இல்லை என்றால் சிகிச்சைக்கு முன் 26 கிலோ எடை கொண்டிருந்த எனது மகள் 14 கிலோவாகக் குறைந்தது எப்படி?. எனது மகளின் வலது கால் கருகியது எப்படி?. எனது மகளுக்கு கை மற்றும் கால் விழுந்தது எப்படி?. எனது மகள் கோமா நிலைக்க தள்ளப்பட்டது எப்படி? என கேள்விகளை முன் வைத்தார்.

எனவே நான் கேட்டுக் கொள்வது என்ன வென்றால் இது போன்ற மருத்ததுவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து எனது மகளின் வாழ்வாதாரத்திற்கு வழி வகை செய்யுமாறும், அரசு மருத்துவமனையில் மிகச் சிறந்த கருவிகள் மட்டும் இருந்தால் போதாது, சிறந்த நேயம் மிக்க மருத்துவர்களும் அவசியம்" என்பதை முதலமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கோரிக்கையாக கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: பள்ளி தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்: 25 குழந்தைகளை வகுப்பில் வைத்து பூட்டிய தாளாளர்; தேனியில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details