சென்னை அண்ணா சாலை தீவுத்திடல் எதிரே உள்ள எஸ்எம் நகர், காந்தி நகர் ஆகிய இடங்களில் சுமார் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கூவம் அருகே வசிக்கும் பொதுமக்கள் அப்புறப்படுத்தக் கோரி மாநகராட்சி அலுவலர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி இன்று (டிச.9) மாநகராட்சி அலுவலர்கள் முதற்கட்டமாக எஸ்எம் நகரில் 400 வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வீடுகளை இடிக்க விடாமல் 10க்கும் மேற்பட்டோர் கூவத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.