தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூட்டுறவு சங்கத் தேர்தல் தேதி அறிவிப்பு - cooperative election date announce

சென்னை: கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு பிப்ரவரி 3ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.

கூட்டுறவு சங்க தேர்தல்
cooperative election

By

Published : Jan 11, 2020, 12:43 PM IST

ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் முடிவடைந்த கூட்டுறவு சங்கங்கள், புதிதாக பதிவு செய்யப்பட்ட சங்கங்கள், தேர்தல் நிறுத்தப்பட்டிருந்த சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் நடத்த மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான கூட்டுறவு மாவட்ட தேர்தல் அலுவலர்கள் இதற்கான தேர்தல் அறிவிப்பை வெளியிடுவார்கள். ஆயிரத்து 28 சங்கங்களின் 11 ஆயிரத்து 368 நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 3 ஆயிரத்து 102 இடங்கள் பெண்களுக்கும், 2 ஆயிரத்து 68 இடங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 27ஆம் தேதியும், மனுக்கள் மீதான பரிசீலனை 28ஆம் தேதியும், மனு வாபஸ் பெறுவதற்கு 29ஆம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 29ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். பிப்ரவரி 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

நிர்வாகக்குழு உறுப்பினர்களின் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் பிப்ரவரி 8ஆம் தேதியன்று சங்கத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நீதிபதிகளை நியமிக்கக் கோரி வழக்கறிஞர்கள் சாலை மறியல்

ABOUT THE AUTHOR

...view details