தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சர்ச்சைக்குள்ளாகும் வனிதாவின் திருமணம் - நடிகை வனிதா 3-வது திருமணம்

சென்னை: முறையான விவாகரத்து தராமல் வேறு ஒரு திருமணம் செய்ததாக பீட்டர் பால் மீது அவரது மனைவி காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

வனிதா
வனிதா

By

Published : Jun 28, 2020, 4:55 PM IST

சென்னை சாலி கிராமத்தை சேர்ந்த பீட்டர் பால் என்பவரை நேற்று ( ஜூன்27) நடிகை வனிதா திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் பீட்டர்பால் மீது அவரின் மனைவி எலிசபெத் ஹெலன், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், பீட்டருடன் திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். முறையாக விவாகரத்து அளிக்காமல் வேறொரு திருமணம் அவர் செய்துகொண்டதாக தெரிவித்தார்.

மேலும் கருத்து வேறுபாடு காரணமாக பீட்டரும் அவரது மனைவி எலிசபெத்தும் 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், வனிதாவை பீட்டர் திருமணம் செய்துள்ளார்.

முறையாக விவாகரத்து அளித்த பிறகே வனிதாவை திருமணம் செய்து இருக்கவேண்டும். அதை பின்பற்றாமல் வனிதாவை திருமணம் செய்ததாகவும் எலிசபெத் ஹெலன் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details