தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்வித் தொலைக்காட்சியில் சர்ச்சைக்குள்ளான திருவள்ளுவர் படம்: பள்ளிக் கல்வித் துறை அவசர ஆலோசனை - School Education in Emergency Consultation

சென்னை: கல்வித் தொலைக்காட்சியில் சர்ச்சைக்குள்ளான திருவள்ளுவர் படம் குறித்து இன்று (டிசம்பர் 28) அவசர ஆலோசனையை பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் மேற்கொள்கின்றனர்.

கல்வி தொலைக்காட்சியில் சர்ச்சைக்குள்ளான திருவள்ளுவர் படம்
கல்வி தொலைக்காட்சியில் சர்ச்சைக்குள்ளான திருவள்ளுவர் படம்

By

Published : Dec 28, 2020, 11:27 AM IST

அரசு கல்வித் தொலைக்காட்சியில் திருவள்ளுவரின் படம் சர்ச்சைக்குரிய வகையில் ஒளிபரப்பானதால் அதிர்ச்சி அடைந்த கல்வித் துறை, அதுபோன்ற பதிவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இன்று (டிசம்பர் 28) ஆலோசனையும் நடைபெற உள்ளது.

கல்வித் துறையில் அவ்வப்போது ஏதாவது சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கின்றன. முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவது, பின்னர் அதைத் திரும்பப் பெறுவது, அரசாணை வெளியிடுவது, அதனைத் திரும்பப் பெறுவது எனப் பலவகையான குழப்பங்கள் நடந்துவருகின்றன.

பாரதியாரின் தலைப்பாகையை காவி நிறத்தில் அச்சடித்து ஏற்கனவே பாடப்புத்தகங்களில் வெளியானதற்கு அரசியல் ரீதியாக கடும் விமர்சனங்களைச் சந்தித்தது தமிழ்நாடு அரசு. தற்போது திருவள்ளுவரின் உடை முழுவதையும் காவிமயமாக்கி அரசு கல்வித் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் மீண்டும் சர்ச்சை வெடித்திருக்கிறது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலர் திருவள்ளுவரின் படத்திற்கு காவிச்சாயம் பூசப்பட்டதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கல்வி தொலைக்காட்சியில் சர்ச்சைக்குள்ளான திருவள்ளுவர் படம்
இந்த விவகாரம் பிரச்சினையானதால் கல்வி தொலைக்காட்சி பாடத்திட்டங்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. எந்த ஒரு தவறும் நடக்கக்கூடாது என்றும், சர்ச்சைக்குரிய கருத்துகள், படங்கள் இடம்பெறக்கூடாது என்றும், அது போன்று இடம்பெற்றால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வித் துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.
மேலும் இது தொடர்பாகப் பல்வேறு ஆலோசனைகளை வழங்குவதற்காக இன்று அவசர ஆலோசனைக் கூட்டமும் நடைபெற இருக்கிறது. அதில் கல்வித் தொலைக்காட்சி பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்கள், அலுவலர்களுக்குப் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட உள்ளன.
இந்த ஆலோசனைக் கூட்டத்தை மாநில கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. கல்வித் தொலைக்காட்சியில் இடம்பெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலமே தயார்செய்து அளிக்கப்படுகிறது.

எனவே இதற்கு முழுப் பொறுப்பு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை சேரும் எனப் பள்ளிக் கல்வித் துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:’இந்துத்துவ சக்திகளின் கைப்பாவையாக செயல்படும் அதிமுக’ - சாடும் வைகோ

ABOUT THE AUTHOR

...view details