தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டட விபத்தில் இளம்பெண் உயிரிழந்த வழக்கு - ஒப்பந்ததாரரின் ஜாமீன் மனு தள்ளுபடி! - chennai anna salai construction demolished

சென்னை அண்ணா சாலை கட்டட விபத்தில் இளம்பெண் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை அண்ணா சாலை கட்டட விபத்தில் ஒப்பந்ததாரரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
சென்னை அண்ணா சாலை கட்டட விபத்தில் ஒப்பந்ததாரரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

By

Published : Feb 9, 2023, 3:23 PM IST

சென்னை:அண்ணா சாலையில் உள்ள பழைய கட்டடத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கும்போது, அந்த பகுதியில் நடந்து சென்ற 2 பெண்கள் மீது சுவர் இடிந்து விழுந்தது. இதில் மதுரையைச் சேர்ந்த பத்ம பிரியா (22) உயிரிழந்தார். விபத்தில் சிக்கிய மற்றொருவர் படுகாயம் அடைந்தார். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஆயிரம் விளக்கு காவல் துறையினர், ஒப்பந்ததாரர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

கடந்த ஜனவரி 29ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் அப்துல் ரஹ்மான், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று (பிப்.9) நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘கட்டடத்தை இடிக்கும் முன் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. சம்பவம் நடந்தபோது அப்துல் ரஹ்மான் அங்கு இல்லை’ என வாதிடப்பட்டது.

இதனையடுத்து காவல் துறை தரப்பில், ‘எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யாமல் கட்டடம் இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக புலன் விசாரணை நடந்து வருவதால், அப்துல் ரஹ்மானுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, ‘இளம்பெண் பலியாகி உள்ளதைக் கருத்தில் கொண்டும், விசாரணை இன்னும் நிலுவையில் இருப்பதாலும், கைது செய்யப்பட்டு குறுகிய காலமே ஆகியுள்ளதாலும் ஜாமீன் வழங்க முடியாது. எனவே, அப்துல் ரஹ்மான் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:சென்னையில் சுவர் இடிந்து விழுந்ததில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details