தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனத்தில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்! - ல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

சென்னை: திருவொற்றியூரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான கான்கார்ட் யார்டு சரக்குப் பெட்டகத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Contract workers protest at a centrally owned company in Tiruvottiyur
Contract workers protest at a centrally owned company in Tiruvottiyur

By

Published : Dec 24, 2020, 4:03 PM IST

சென்னை திருவெற்றியூர் கரிமேடு தெரு அருகே மத்திய அரசுக்கு சொந்தமான கான்கார்ட் யார்டு என்ற கன்டெய்னர் சரக்கு பெட்டகம் உள்ளது.

இங்கு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யக்கூடிய கன்டெய்னர்கள் கொண்டு வரப்படுகின்றன.

இந்த கன்டெய்னர் பெட்டிகளை கையாளும் பணியில் ராட்சத கன்டெய்னர் பெட்டி தூக்கும் மெஷின் ஆபரேட்டர்கள், உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள், கூலித் தொழிலாளர்கள் என ஏராளமானோர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கண்டனர் பெட்டிகளை கையாளும் பணிகளை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் ஏற்கனவே பணி செய்து கொண்டிருந்த ஒப்பந்ததாரர்களுக்கு பதிலாக புதிய ஒப்பந்ததாரர்களை பணியில் ஈடுபடுத்தியதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த பணியாளர்கள், ஏற்கனவே பணியில் உள்ளவர்களை விடுத்து புதிய பணியாளர்களை அனுமதிக்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து பணி செய்யும் இடத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

இதையடுத்து, திருவொற்றியூர் காவலர்கள் தொழிற்சங்க தலைவர்களுடன் சென்று, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இந்தப் ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: பணி நிரந்தரம் செய்யக் கோரி டிஜிபியிடம் மனு அளித்த தூய்மைப் பணியாளர்கள்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details