தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதகையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம் - Wage arrears

உதகையில் இரண்டு மாத ஊதியம் வழங்காததைக் கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.

காத்திருப்பு போராட்டம்
காத்திருப்பு போராட்டம்

By

Published : Jul 1, 2021, 8:11 PM IST

நீலகிரி: உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இவற்றில் 500-க்கும் மேற்பட்ட நிரந்தர, ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். அதில் 120-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

இது குறித்து நகராட்சி ஆணையர், துறை அலுவலர்களிடம் வினவியும், சரியான பதில் அளிக்கவில்லை எனத் கூறப்படுகிறது. இதனையடுத்து ஊதிய பாக்கியை உடனடியாக வழங்கக் கோரி, கடந்த இரண்டு நாள்களுக்கு (ஜூன் 29) முன்னர் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட உதகை நகராட்சி ஆணையர், ”இண்டு நாள்களுக்குள் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார். ஆனால், இரண்டு நாள்களாகியும் ஊதியம் வழங்கப்படவில்லை.

இதனைக் கண்டித்து இன்று (ஜூலை 1) ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கும்வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும் என ஒப்பந்தப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:மேகேதாட்டு அணை விவகாரம்: தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்!

ABOUT THE AUTHOR

...view details