கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இதனால், சென்னை சர்வதேச விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. போதிய பயணிகள் இல்லாத காரணத்தால், சென்னை விமானநிலையத்தில் இன்று 30 சா்வதேச விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன.
ரத்துசெய்யப்பட்ட விமானங்கள்
இலங்கைக்குச் செல்லும் மூன்று விமானங்கள், குவைத்துக்குச் செல்லும் மூன்று விமானங்கள், தாய்லாந்து செல்லும் இரண்டு விமானங்கள், மலேசியா செல்லும் இரண்டு விமானங்கள், தோகா, சிங்கப்பூா், ரியாத், துபாய், மஸ்கட் ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு வரும் 15 வருகை விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இந்த நாடுகளுக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டுச் செல்லும் 15 விமானங்களின் சேவையும் ரத்துசெய்யப்பட்டன.
இதைப் போலவே, போதிய பயணிகள் இல்லாமல் சென்னையிலிருந்து பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, மும்பை ஆகிய இடங்களுக்குச் செல்லும் நான்கு விமானங்களின் சேவையும், இந்த நகரங்களிலிருந்து சென்னைக்கு வரும் நான்கு விமானங்களின் சேவையும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தனிமைப்படுத்தப்பட்ட மும்பை இந்தியன்ஸ் வீரர்... மனைவியின் ஜாலி கடிதம்...!