சென்னை: இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்துகள் வருமாறு:
- விழுப்புரம் மாவட்டம் சேந்தனூரைச் சேர்ந்த பச்சையப்பன் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பல்லாயிரம் ரூபாயை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்டதற்குப் பிறகு மீண்டும் தற்கொலைகள் தொடங்கியிருப்பது வேதனையளிக்கிறது!
- தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களின் கேடுகள், அதனால் நிகழ்ந்த தற்கொலைகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு பாமக வலியுறுத்திவந்ததன் பயனாக கடந்த ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், அது செல்லாது என அறிவிக்கப்பட்டது பெரும் பின்னடைவு!
- ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட அடுத்த நிமிடமே ஆன்லைன் சூதாட்டத்திற்கு மக்களை அழைக்கும் விளம்பரங்கள் குவிகின்றன. தடை விலகிய 16 நாள்களில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பதிலிருந்து நிலைமையின் தீவிரத்தை உணரலாம்!
- ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனியும் மக்கள் இரையாகக் கூடாது. ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்வதற்கான திருத்தப்பட்ட சட்ட முன்வரைவை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே கொண்டுவந்து நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
- இளைஞர் பச்சையப்பனின் தற்கொலை மற்றவர்களுக்குப் பாடமாக அமைய வேண்டும். தமிழ்நாட்டு இளைஞர்கள் எவரும் ஆன்லைன் சூதாட்டம் என்ற மாயவலையில் சிக்கிவிடாமல் கல்வி, வேலைவாய்ப்பு, குடும்பப் பொறுப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!