தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமானங்களில் தொடரும் கடத்தல்கள்... ஒரே நாளில் கோடிக்கணக்கில் பறிமுதல் - சுங்க இலாகா அதிகாரிகள்

சென்னை: விமான நிலையத்தில் ஓரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ.17 லட்சம் பதிப்புள்ள மிண்ணனு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

continuing-smuggling-at-the-airport-thousands-of-goods-seized-overnight
continuing-smuggling-at-the-airport-thousands-of-goods-seized-overnight

By

Published : Feb 21, 2020, 10:10 AM IST

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குப் பெரும் அளவில் கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த திருச்சியைச் சேர்ந்த முகமது அசாருதீன் (23), ஜான் முகமது (29), ஜெய்லாதீன் (40), சென்னையைச் சேர்ந்த முகமது (60), மலேசியாவிலிருந்து வந்த சிவகங்கையைச் சேர்ந்த அஸ்லாம் பிகாஸ் (23) ஆகிய ஐந்து பேரை சந்தேகத்தின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ. 1 கோடியே 29 லட்சம் மதிப்புள்ள சுமார் 3 கிலோ தங்கத்தை கைப்பற்றினார்கள்.

அதேபோல், துபாயிலிருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த சிக்கந்தர் (26), ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது அஸ்மத்துல்லா கான் (32), ஒபைஸ் முகமது (20) ஆகிய மூன்று பேரை சோதனையிட்ட சுங்க இலாகா அதிகாரிகள், அவர்களிடமிருந்து ரூ. 83 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள சுமார், 1 கிலோ 960 கிராம் தங்கத்தைக் கைப்பற்றினார்கள்.

இந்த எட்டு பேரிடமிருந்து ரூ. 17,91,000 மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள், லேப்டாப்கள் ஆகியவற்றையும் சுங்க அதிகாரிகள் கைப்பற்றினார்கள். மேலும் விமான நிலைய முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறை அருகே இருந்த குப்பையில் இருந்து கேட்பாரற்றுக் கிடந்த ரூ. 15 லட்சத்து 36 ஆயிரம் மதிப்புள்ள 358 கிராம் தங்கத்தைக் கைப்பற்றினார்கள்.

விமான நிலையத்தில் தொடரும் கடத்தல்

ஒரே நாளில் நடத்திய சோதனையில் எட்டு பேரிடம் இருந்து ரூ. 2 கோடியே 27 லட்சத்து 59 ஆயிரம் மதிப்புள்ள 5 கிலோ 366 கிராம் தங்கமும் ரூ. 17 லட்சத்து 91 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள், லேப்டாப்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட எட்டு பேரிடமும் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோடிக்கணக்கிலான தங்கம் பறிமுதல்: குருவிகளுக்கு சுங்கத் துறை உடந்தை?

ABOUT THE AUTHOR

...view details