தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடா் விடுமுறை: பயணிகள் இன்றி காலியாக இயக்கப்படும் விமானங்கள் - Continues holiday: chennai Airport empty without passengers

சென்னை: ஆயுதபூஜை தொடா் விடுமுறை காரணமாக உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து விமானங்கள் காலியாக இயக்கப்படுகின்றன.

தொடா் விடுமுறை: சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைவு!
தொடா் விடுமுறை: சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைவு!

By

Published : Oct 25, 2020, 11:14 AM IST

ஆயுதபூஜை, விஜயதசமி தொடா் விடுமுறை காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை இன்று (அக். 25) மிகவும் குறைவாகவே உள்ளது.

காலை 6.05 மணிக்கு மும்பை செல்லும் விமானத்தில் 33 பேரும், 6.15 மணி அகமதாபாத் விமானத்தில் 39 பேரும், 6.55 மணி டெல்லி விமானத்தில் 45 பேரும், 7 மணி திருச்சி விமானத்தில் 36 பேரும், 7.05 மணி விசாகப்பட்டிணம் விமானத்தில் 25 பேரும், 7.15 மணி சேலம் விமானத்தில் 24 பேரும், 7.20 மணி பெங்களூரு விமானத்தில் 22 பேரும், 8.25 மணி கொச்சி விமானத்தில் 19 பேரும், 8.40 மணி கூப்பிலி விமானத்தில் 15 பேரும், 11.25 மணி கோவை விமானத்தில் 14 பேரும், பகல் 12.15 மணி மதுரை விமானத்தில் 13 பேர் மட்டுமே பயணிக்கின்றனா்.

அதேபோல், காலை 8.05 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் 27 பேரும், 8.15 மணி டில்லி விமானத்தில் 32 பேரும், 9.25 மணி சேலம் விமானத்தில் 29 பேரும், 11.15 மணி மும்பை விமானத்தில் 32 பயணிகள் மட்டுமே சென்னைக்கு வருகின்றனா். பிற்பகல் 3.05 மணிக்கு மதுரையிலிருந்து சென்னை வரும் ஏா் இந்தியா விமானத்தில் இதுவரை 2 பயணிகள் மட்டுமே வருவதற்கு முன்பதிவு செய்துள்ளனா்.

இன்று காலை 7.55 மணிக்கு டில்லியிலிருந்து புறப்பட்டு சென்னை வந்து சேரவேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் போதிய பயணிகள் இல்லாததால் பெங்களூரு திருப்பி அனுப்பப்பட்டது. பெங்களூரிலிருந்து சென்னை வரும் பயணிகளை ஏற்றிக்கொண்டு தாமதமாக சென்னை வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..."நீதி மறுக்கப்பட்டால் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் போராடுவேன்" - ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details