சென்னை: மத்திய அரசு கொண்டுவந்துள்ள கலப்பட மருத்துவமுறையைக் கண்டித்தும், அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்திய மருத்துவ சங்கத்தினர் நாடு முழுவதும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்தவகையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கிரிஸ்வரி தனியார் மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவ சங்கத்தினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கடந்த 1ஆம் தேதிமுதல் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஜெயலால் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு அவர்களை வாழ்த்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய அரசு கலப்பட மருத்துவமுறையை அறிமுகம் செய்துள்ளது. அதனைத் திரும்பப் பெற வேண்டும். அலோபதி, சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட அனைத்து மருத்துவ முறைகளையும் ஒன்றிணைத்து கொண்டுவரப்பட்டுள்ள கலப்பட மருத்துவ முறையால் அலோபதி என்ற நவீன மருத்துவத்தின் தனித்தன்மை அழிந்துவிடும்.