சென்னை: பூந்தமல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேலை மற்றும் படிப்புக்காக ஏராளமானோர் அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கின்றனர். இவர்கள் தங்களின் வாகனங்களை வீட்டிற்கு வெளியே வரிசையாக நிறுத்தி வைப்பது வழக்கம்.
இந்த நிலையில் பூந்தமல்லி பகுதியில் தினந்தோறும் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்படும் விலை உயர்ந்த சைக்கிள்கள் மற்றும் பைக்குகளை மர்ம நபர்கள் தொடர்ந்து திருடி செல்கின்றனர். இவ்வாறு வாகனங்களை இழக்கும் அதன் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்போதெல்லாம், சிசிடிவி காட்சிகளையும் இணைத்தே கொடுக்கின்றனர்.