வேலூர்:காட்பாடி தாலுகாவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலையை பராமரிக்க கோரி ஸ்ரீராமலு என்பவர் தொடர்ந்த வழக்கில், நீர்நிலையில் விவசாயம் மற்றும் செங்கல் சூளை உள்ளதால், இந்த ஆக்கிரமிப்புகளை சட்டப்படி அகற்றி, நீர்நிலையை 2 மாதங்களுக்குள் குடிமராமத்து பணிகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், 3 மாதங்களில் இந்த நடவடிக்கைகளை முடிக்க வேண்டும். அதன்பின்னர் நீர்நிலையை முறையாக பராமரிக்க வேண்டும் என்று கடந்த 2020ம் ஆண்டு உத்தரவிட்டார்.
ஆனால் இந்த உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை என்று அப்போதைய வருவாய் துறை செயலாளர் சந்திரமோகன், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், காட்பாடி தாசில்தார் பாலமுருகன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீராமலு தொடர்ந்தார்.