சென்னை: கடந்த ஆண்டு சென்னை ஐஐடி வளாகத்தில் ஒரே இடத்தில் நாய்களை அடைத்து வைத்திருப்பதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக விலங்கு நல ஆர்வலர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணையில் 186 நாய்களை சென்னை ஐஐடி வளாகத்திற்குள் ஓரிடத்தில் அடைத்து வைத்திருந்ததும், 45 நாய்கள் உயிரிழந்ததும் தெரியவந்தது.