தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 21, 2020, 5:02 PM IST

ETV Bharat / state

கோடம்பாக்கத்தில் குறைந்துவரும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை!

சென்னை: கோடம்பாக்கத்தில் 124ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை ஒரே நாளில் 17 ஆக குறைந்துள்ளது என சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

containment zones reduced in chennai kodambakkam
containment zones reduced in chennai kodambakkam

சென்னையில் தினமும் 1000க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். தொற்றால் அதிக பாதிப்பு உள்ள கோடம்பாக்கம், அண்ணா நகர் பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பது, மக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, மருத்துவ முகாம் என மாநகராட்சியும் சுகாதாரத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளைக் மேற்கொண்டுவருகின்றன.

இந்தப் பரவலை தடுக்கும் ஒரு பகுதியாக முதலில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் முழு தெருவையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்தது. இது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதால், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீட்டை மட்டும் தனிமைப்படுத்தி வருகின்றனர்.

ஒரு தெருவில் மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தொற்று இருந்தால் தெருவை தனிமைப்படுத்தி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்துவருகிறது. இந்தப் பகுதிகளில் வெளியில் இருந்து உள்ளே யாரும் போகக்கூடாது, உள்ளே இருப்பவர்கள் வெளியில் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

அங்கு வாழும் மக்களுக்கு மாநகராட்சித் தன்னார்வலர்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்கித்தருவார்கள். இதையடுத்து சென்னையில் ஏற்கனவே 188ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை தற்போது 81ஆக குறைந்துள்ளது. இதன் மண்டல வரையான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன் நிலவரம் பின்வருமாறு...

தண்டையார்பேட்டை - 1

திரு.வி.க நகர் - 9

அம்பத்தூர் - 8

அண்ணா நகர் - 27

கோடம்பாக்கம் - 17

வளசரவாக்கம் - 5

ஆலந்தூர் - 5

அடையார் - 9

கட்டுப்படுத்தப்பட்ட தெருவில் தொடர்ந்து 14 நாள்களுக்கு நோய் தொற்று பாதிப்பு இல்லை என்றால் அது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.

இதையும் படிங்க... சென்னையில் குறைந்துவரும் கரோனா தொற்று பாதிப்பு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details