தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தொற்று தீவிரம்: அதிகரிக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை - சென்னை மாநகராட்சி

சென்னை: கரோனா தொற்று  பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

By

Published : Jun 19, 2020, 8:38 PM IST

தமிழ்நாட்டில் கரோனாவின் தாக்கம் காற்றைவிட வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக சென்னையில் அதன் வீரியம் பலமடங்கு அதிகரித்துள்ளது. எனவே இதை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட (தனிமைப்படுத்தப்பட்ட ) பகுதிகளை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி சென்னையின் 4ஆவது மண்டலத்தில் 24 பகுதிகள், 5ஆவது மண்டலத்தில் 3 பகுதிகள், 6ஆவது மண்டலத்தில் 3 பகுதிகள், 7ஆவது மண்டலத்தில் 2 பகுதிகள், 8ஆவது மண்டலத்தில் 8 பகுதிகள், 9ஆவது மண்டலத்தில் 3 பகுதிகள், 10ஆவது மண்டலத்தில் 15 பகுதிகள், 14ஆவது மண்டலத்தில் 2 பகுதிகள், 15ஆவது மண்டலத்தில் 4 பகுதிகள் என மொத்தம் 64 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது வீடு வீடாக தொற்று தொடர்பான சோதனைகள் மேற்கொளப்படுவதால் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் சென்னை நகருக்குள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புகள் ஏற்படாதபடி மக்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும். அத்தியாவசியம் கருதி வெளியே வந்தால் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details