கரோனா வைரஸ் தொற்று பரவலினால் சென்னையில் தினமும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வீதி வீதியாக சென்று கிருமி நாசினி தெளிப்பது, மக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, மருத்துவ முகாம் நடத்துவது என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது மாநகராட்சி நிர்வாகம்.
இருப்பினும், இந்த நோய் தொற்று குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக, அதிக பாதிப்பு உள்ள தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுவருகிறது.
இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து யாரும் வெளியில் செல்லவும், வெளியில் இருப்பவர்கள் யாரும் உள்ளே செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு, அங்குள்ள மக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசிய பொருள்களை மாநகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.
இந்த நிலையில் சென்னையிலுள்ள 15 மண்டலங்களிலும் 143ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 155ஆக அதிகரித்துள்ளது. இதன் மண்டல வாரியான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,
தண்டையார்பேட்டையில் - 50
திருவிக நகரில் - 3