கரோனா தொற்றால் சென்னையில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும் குணமடைந்தோரின் விழுக்காடு அதிகரித்துவருகிறது. கரோனா பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, மக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, மருத்துவ முகாம்கள் அமைப்பது என மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
மேலும் ஒரு தெருவில் ஒருவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்தத் தெரு முழுவதையும் முதலில் மாநகராட்சி அடைத்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்துவந்தது. இது மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தியதால் ஒரு தெருவில் மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தொற்று இருந்தால் மட்டுமே தெருவைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்ச தற்போது அறிவித்துவருகிறது.
இதையடுத்து, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குணமடைந்தோரின் விழுக்காடு தினமும் அதிகரித்து வந்ததால் கடந்த மாதம் செப். 18 தேதியிலிருந்து 30ஆம் தேதி வரையிலும் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் கூட இல்லை. செப்டம்பர் 29 தேதி அன்று வளசரவாக்கம் மண்டலத்தில் 1 கட்டுப்படுத்தப்பட்ட பகுதி மீண்டும் உருவானது. அன்று தொடங்கி நாளுக்கு நாள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இன்றைய நிலவரப்படி மொத்தம் 42 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.
அவை பின்வருமாறு: