கரோனா தொற்றின் 2 ஆம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கிருமி நாசினி தெளித்தல், மக்களுக்கு முகக்கவசம் வழங்குதல், மருத்துவ முகாம்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
கடந்தாண்டு ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அந்த முழு தெருவும் மூடப்பட்டு மாநகராட்சியால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும். இதன் காரணமாக, பொது மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.