தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை பயணிக்கு மன உளைச்சல், எமிரேட்ஸ் விமான நிறுவனம் இழப்பீடு - Emirates pay compensation for Chennai passenger

சென்னை சேர்ந்த பயணியை துபாய் விமான நிலையத்தில் வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

emirates airlines ticket booking
emirates airlines ticket booking

By

Published : Dec 17, 2022, 6:33 AM IST

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த வழக்கறிஞர் ஷினு தாமஸ் என்பவர் சென்னையில் இருந்து துபாய் சென்று மீண்டும் சென்னை திரும்புவதற்காக 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எமிரேட்ஸ் விமானத்தில் டிக்கட் புக் செய்துள்ளார். சென்னையிலிருந்து துபாய் சென்ற ஷினு தாமஸ், 2016ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி பிற்பகலில் சென்னை திரும்புவதற்காக துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அவசர மருத்துவ காரணங்களுக்காக சிலர் செல்ல வேண்டி உள்ளதால் அவரை இரவு விமானத்தில் செல்லும்படியும், அதற்கான நிவாரணமாக, ஒரு முறை துபாய் வந்து செல்வதற்கான இலவச டிக்கெட், 100 திர்ஹாம் மதிப்பிலான வரி இல்லாத கூப்பன், 1 நாள் இரவு இலவசமாக தங்குவதற்கான கூப்பன் ஆகியவற்றை தருவதாகவும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்டு இரவு 9 மணி விமானத்தில் செல்ல ஷினு தாமஸ் ஒத்துக்கொண்ட நிலையில், திடீரென மதிய விமானத்திலேயே செல்லும்படி அரை மணி நேரத்திற்கும் குறைவான அவகாசம் வழங்கி, உடனே புறப்படும்படி நிர்பந்ததாக கூறப்படுகிறது. அதன்படி சென்னை திரும்பிய ஷினு தாமஸ், துபாய் விமான நிலையத்தில் எமிரேட்ஸ் விமான நிறுவனம் அளித்த மன உளைச்சலுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சினு தாமஸ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் வீ.ராமராஜ், உறுப்பினர்கள் என்.பாலு மற்றும் வி.லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், ஷினு தாமசுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக 50 ஆயிரம் ரூபாயை நான்கு வார காலத்திற்குள் எமிரேட்ஸ் விமான நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:அயன் பட பாணியில் வயிற்றில் வைத்து ரூ.6.31 கோடி ஹெராயின் கடத்தல் - பெண் கைது

ABOUT THE AUTHOR

...view details