சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் கரோனா தொற்று காரணமாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. தற்போது நோய்த்தொற்றின் தாக்கத்தைக் கருத்தில்கொண்டு 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவித்து இருந்தது.
கரோனா முதல் அலை
தமிழ்நாட்டில் 2020 மார்ச் 24ஆம் தேதி முதல் கரோனா முதலாவது அலை பரவத் தொடங்கியது. இதன் காரணமாக அரசு, தனியார் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி முதல் கரோனா தொற்று குறைய ஆரம்பித்தது. இதனால் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.
கரோனா இரண்டாம் அலை
2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கரோனா இரண்டாம் அலை பரவத் தொடங்கியதால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. தற்பொழுது கரோனா தொற்றின் இரண்டாவது அலை குறையத் தாெடங்கி உள்ளது. கடந்த 15 நாட்களாக கரோனா தினசரி பாதிப்பு 2,000 என்ற அளவில், தமிழ்நாட்டில் இருந்து வருகிறது.
பள்ளிகள் திறப்பு