தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அரசு மக்களுக்கு செய்த சத்தியத்தை எந்த ஷாவும் மாற்ற முயற்சிக்கக்கூடாது" - கர்ஜித்த கமல்ஹாசன்!

இந்தித் திணிப்புக்கு எதிராக மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைராலகி வருகிறது.

kamal

By

Published : Sep 16, 2019, 6:01 PM IST

மத்திய அரசின் இந்தி கொள்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் தங்களது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் இதுகுறித்த தனது கருத்தை தனது சமூகவலைதளப்பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

இந்தித் திணிப்புக்கு எதிரான கமல்ஹாசனின் பதிவு

அதில், "பல ராஜாக்கள் தங்கள் ராஜ்யங்களை விட்டுக்கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால், விட்டுக் கொடுக்க முடியாது என்று உறுதியாக பல இந்தியர்கள் பல மாநிலங்கள் சொன்ன விஷயம், மொழியும் கலாசாரமும் என்பதுதான்.

1950இல் இந்தியா குடியரசானபோது, அதே சத்தியத்தை அரசு மக்களுக்கு செய்தது. அந்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ மாற்றிவிட முயற்சிக்கக் கூடாது.

ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம், சிறிய வெற்றி. எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால், அது அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தேவையற்றது.

பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் தேசிய கீதத்தை அவர்கள் மொழிகளில் பாடுவதில்லை. வங்காளிகளைத் தவிர. இருப்பினும் அதை சந்தோஷமாக நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம், பாடிக்கொண்டிருப்போம். காரணம் அதை எழுதிய கவிஞர் எல்லா கலாசாரத்திற்கும் எல்லா மொழிக்கும் தேவையான இடத்தையும் மதிப்பையும் அதில் கொடுத்திருந்தார்.

இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து, அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டிவிடும்.

தயவுசெய்து அதை செய்யாதீர்கள். வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் காண முடியும். வாழிய செந்தமிழ்...வாழ்க நற்றமிழர்...வாழிய பாரத மணித்திரு நாடு" என்று அந்த வீடியோ பதிவு முடிவடைகிறது.

ABOUT THE AUTHOR

...view details