தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசியல் சாசன தினம்: உறுதி மொழியை ஏற்ற பின்லாந்து கல்வி குழு! - Constitution of india

சென்னை : அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின் மீது பின்லாந்து கல்வி குழுவினர் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

Constitution of india
Constitution of india

By

Published : Nov 26, 2019, 2:51 PM IST

இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 70ஆவது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 2015ஆம் ஆண்டு முதல் மோடி தலைமையிலான அரசு நவம்பர் 26ஆம் தேதியை அரசியல் சாசன தினமாக அறிவித்து ஆண்டுதோறும் கொண்டாடிவருகிறது.

இதனை முன்னிட்டு இன்று இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பின்லாந்து நாட்டினர் இந்திய அரசமைப்பு உறுதிமொழி
அதன் படி, சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் ஆசிரியர்களுக்குப் பின்லாந்து நாட்டுக் கல்வி முறை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. முன்னதாக பயிற்சி நிறுவனத்தின் சார்பில் இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான உறுதி மொழியை ஆசிரியர்களுடன் சேர்ந்து பின்லாந்து நாட்டுக் கல்வி குழுவினர் ஏற்றுக்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details