அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும் - ஸ்டாலின்! - Constitution Amendment Need correction - MK Stalin
சென்னை: மத்திய, மாநில அரசுகளுக்கு சம அதிகாரம் உள்ளவாறு அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
stalin
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏழு பேர் கொண்ட அரசியலமைப்பு வரைவுக் குழுவால் உருவாக்கப்பட்டு, 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 70ஆவது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 2015ஆம் ஆண்டு முதல் மோடி தலைமையிலான அரசு நவம்பர் 26ஆம் தேதியை அரசியல் சாசன தினமாக அறிவித்து ஆண்டுதோறும் கொண்டாடிவருகிறது.