சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டுவந்த டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி இரண்டாகப் பிரிக்கப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்பும், திருவள்ளூர் மாவட்டம் பட்டரைப் பெரும்புதூரில் மூன்றாண்டு சட்டப்படிப்பும் நடத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில், சென்னை கல்லூரி இடமாற்றத்தை எதிர்த்து சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு சட்டக்கல்வி இயக்குநர் தாக்கல் செய்த பதில் மனுவில், அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள 186 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களில் 96 நிரப்பப்பட்டு விட்டதாகவும், கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசு சட்டக்கல்லூரிக்கு முன்னாள் அமைச்சர் கக்கன் பெயர்? - chenai high court
சென்னை: காஞ்சிபுரம் அல்லது திருவள்ளூர் அரசு சட்டக்கல்லூரிக்கு முன்னாள் தமிழ்நாடு அமைச்சர் கக்கன் பெயரை சூட்டலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
ஆங்கில பேச்சுத்திறனை வளர்க்க பிரிட்டிஷ் கவுன்சிலுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசின் ஒப்புதலுடன் விரைவில் அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் ஆங்கில பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னர் நீதிபதிகள், இரண்டு சட்டக் கல்லூரிகளும் ஒரே பெயரில் செயல்படுவதால் மாணவர்களுக்கும், மற்றவர்களுக்கும் குழப்பம் ஏற்படுவதாக கூறப்படுவதால் ஏதேனும் ஒரு கல்லூரிக்கு தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் கக்கன் பெயரை வைக்கலாம் என பரிந்துரைத்தது. மேலும், தமிழ்நாடு அரசே இது குறித்து முடிவு செய்யலாம் எனவும் தெரிவித்தனர்.
மாணவர்களின் பாதுகாப்பிற்காக அப்பகுதியில் கூடுதல் காவலர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் எனவும், உடற்கல்வி இயக்குநர்களை நியமித்து படிப்புடன் விளையாட்டையும் ஊக்குவித்து ஆரோக்கியமான சூழலை உருவாக்கி மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.