கும்பகோணம்:திருநாகஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை மாவட்டம் லாகடம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கொங்குநாச்சி அம்மன் திருக்கோயில், சென்னை மாவட்டம் வடபழனி ஆண்டவர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம் பூதநாரயணபெருமாள் திருக்கோயில் உள்பட்ட ஐம்பது திருக்கோயிலில் கடந்த ஐந்து மாதங்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டது.
பல்வேறு கோயில்களில் குடமுழுக்கு
தற்போது திருச்சி மாவட்டம் இலால்குடி சீனிவாச வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி திருவழுதீஸ்வரர் திருக்கோயில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி செல்லப்பர் வகையறா திருக்கோயில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் விஸ்வநாதசுவாமி திருக்கோயில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வளரொளீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணாற்றாங்கரை ஆனந்த வல்லியம்மன் திருக்கோயில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் கரியகாளியம்மன் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
பாபநாசம் தாமோதர வினாயகர் என்ற இரட்டைப் பிள்ளையார் திருக்கோயில், கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணபுரம் முத்தாரம்மன் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்தாலம்மன் திருக்கோயில் ஆகிய கோயில்களில் வருகின்ற 6 அன்று குடமுழுக்கு நடைபெற உள்ளது.