சென்னை: அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஷ் நடித்து இன்று வெளியான திரைப்படம் கான்ஜூரிங் கண்ணப்பன். இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் சிறப்புக்காட்சி சென்னை தியாகராய நகரில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது.
இந்த சிறப்புக்காட்சியில் நடிகர்கள் சதீஷ், ஆனந்த் ராஜ், இயக்குநர் சேவியர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ், “சந்தோஷமான இடத்தில் இருக்கிறோம். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இயக்குநரின் முதல் படம். எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. சத்யா படத்தில் வருகிற அமலா மாதிரி நடிகை அழகாக இருக்கிறார். நடிகை படத்தில் பேய் வேடத்தில் நடித்திருக்கிறார். எல்லா நடிகர்களுக்கும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் படம் பண்ண வேண்டும் என்று ஆசை இருக்கும். எங்களுக்கு அது அமைந்துள்ளது.
தளபதி 68 படத்தில் இருக்கிறீர்களா குறித்த கேள்விக்கு, நாய் சேகர் படத்திற்குப் பிறகு நிறைய கதைகள் முன்னணி கதாபாத்திரமாகத் தான் வருகிறது. விஜய்யின் வெறித்தனமான ரசிகன் நான். நிறுவனம் ( ஏஜிஎஸ் ) அழைத்தால் நான் ரெடி தான்.
நாய் சேகர் கதையின் ஒன் லைன் விஜய் கிட்ட சொன்னதும் சிரித்து விட்டார். அதே மாதிரி கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் ஒன் லைன் கேட்டவுடன் பயங்கரமாக சிரித்தார். சென்னையில் மழை பாதிப்பு குறித்த கேள்விக்கு, சென்னையில் சில ஏரியாக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவங்களுக்கும் இந்த படம் உற்சாகத்தைத் தரும்” என்று நம்புவதாக கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த்ராஜ்,“புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த வருத்தங்களை தெரிவிக்கிறேன். முதலில் இயக்குநர் இந்த கதையை சொல்லும் போது ரொம்ப பிடித்தது. ஹீரோவாக சதீஷ் ரொம்ப நன்றாக நடித்துள்ளார். இந்த படம் முழு திருப்தியைக் கொடுத்தது. இது ஜாலியான படம்.
பழைய படங்களில் வில்லனாகப் பார்த்து விட்டு, இப்போது வில்லன் கலந்த காமெடியனாக நடிப்பது குறித்த கேள்விக்கு, என் கூடப் படம் பண்ண ஹீரோ எல்லாம் வில்லனாகி விட்டார்கள். அரவிந்த் சாமி கூட வில்லனாகி விட்டார். மக்களுக்குப் பிடித்ததால் இந்த மாதிரி நடித்தாலும் பார்க்கிறார்கள். இது நன்றாக இருக்கிறது. விஜய்யுடன் படத்தில் நடிக்கிறீர்களா என்ற கேள்விக்கு, விஜய் முடிவெடுத்தால் எப்போது வேண்டுமானாலும் படத்தில் ( தளபதி 68 ) வருவேன்.
கேஜிஎப் படத்தின் வியாபாரம் கதைக்கானது தானே தவிர ஹீரோக்கானது அல்ல. லேடி கெட்டப் குறித்த கேள்விக்கு, லேடி கெட்டப்பில் இன்னோர் படம் அமையும் என்றால் நான் நடிப்பேன். பெண் வேடம் போடும் போது பெண்ணுக்குரிய மரியாதை கிடைக்கிறது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:மிக்ஜாம் புயலும், மீட்பு பணிகளும்.. ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகளுக்கு தலைமை செயலரின் 15 அதிரடி உத்தரவுகள்!