தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் - ஈ.வி.கே.ஸ் இளங்கோவன் - நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்

இன்னும் இரண்டு வருடங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று மோடியை வீட்டுக்கு அனுப்ப போகிறோம் என முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.ஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் - ஈ.வி.கே.ஸ் இளங்கோவன்
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் - ஈ.வி.கே.ஸ் இளங்கோவன்

By

Published : May 16, 2022, 7:50 PM IST

சென்னை :குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் சமூகத்தில் சமநிலை ஏற்படுத்திய மகான் அன்னமாச்சாரி பற்றிய நூல் நூல்வெளியிட்டு விழா நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கலந்து கொண்டு நூலினை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், “இந்தியா முழுவதும் காவிமயம் கொண்டு வர வேண்டும் என்று மோடியும் அவரது கட்சியை சார்ந்தவர்களும் நினைத்து வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் - ஈ.வி.கே.ஸ் இளங்கோவன்

கண்டிப்பாக அது நிறைவேறாது. இந்திய மக்களை மொழியின் பெயராலோ ஜாதியின் பெயராலோ பிரிக்க முடியாது. அண்ணாமலையை பொருத்தவரை தவறான தகவல்களை கூறி வருகிறார். அதனால் அவர் திருவண்ணாமலைக்கு சென்று சித்தராக இருப்பது தான் நல்லது.

இன்னும் இரண்டு வருடங்களில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றியை பெற்று மோடியை வீட்டுக்கு அனுப்ப போகிறோம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க :காங்கிரஸ் விரும்புவது ஒரே இந்துஸ்தான்- ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details