தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குஷ்பூவை நடிகையாகவே பார்த்தார்கள்' - கே.எஸ். அழகிரி - குஷ்பு கே எஸ் அழகிரி

குஷ்பூவை நடிகையாகவே கட்சியிலிருந்தவர்கள் பார்த்தார்கள்; அவரை என்றுமே காங்கிரஸ் நிர்வாகியாக பார்க்கவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

Khushboo congress problem
'குஷ்புவை நடிகையாகவே கட்சியில் இருந்தவர்கள் பார்த்தார்கள்' -கே. எஸ். அழகிரி

By

Published : Oct 12, 2020, 12:03 PM IST

சென்னை:காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் குஷ்பூ, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் டெல்லியில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையில் குஷ்பூ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்விகளை எழுப்பிய போது பதிலளிக்காமல் சென்றார்.

இந்நிலையில், “காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகிறேன்” என காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “கட்சிக்காக உண்மையாக உழைக்க எண்ணிய என்னைப் போன்றவர்களை உயர் பதவியில் இருக்கிறவர்கள் சர்வாதிகாரத்துடன் ஒடுக்கிறார்கள்.

ஆகவே கட்சியிலிருந்து விலகும் முடிவை நன்கு ஆலோசித்து நான் எடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து குஷ்பூவின் பதவி பறிக்கப்பட்டது.

குஷ்பூவின் கடிதம் தொடர்பாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், "குஷ்பூவை கட்சியில் உள்ளவர்கள் நடிகையாகவே பார்த்தார்களே தவிர காங்கிரஸ் நிர்வாகியாக பார்க்கவில்லை. கட்சியிலும் அவர் நடிகையாகவே இருந்தார். அவருக்கு கொள்கை பிடிப்பு கிடையாது. குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுவதால் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித இழப்பும் இல்லை" என்றார்.

இதையும் படிங்க:தலைகீழ் மாற்றம் எப்படி? குஷ்புக்கு குட்லக் சொல்லி கேள்வி எழுப்பிய கார்த்தி சிதம்பரம்

ABOUT THE AUTHOR

...view details