நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் விக்கிரவாண்டியில் திமுகவும் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன.
அதிமுக சார்பில் இரண்டு தொகுதிகளுக்கும் ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. திமுகவும் தனது விக்கிரவாண்டி வேட்பாளரை அறிவித்துவிட்டது.