தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நளினிக்கு ஜாமீன் வழங்க காங்கிரஸ் எதிர்ப்பு... - நளினிக்கு ஜாமீன் வழங்கினால் தவறான முன்னுதாரணமாகி விடும்

ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் தண்டனை கைதி நளினிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து தென்சென்னை காங்கிரஸ் மாவட்ட தலைவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நளினிக்கு ஜாமீன் வழங்கினால் தவறான முன்னுதாரணமாகி விடும்.. நளினிக்கு ஜாமீன் வழங்க காங்கிரஸ் எதிர்ப்பு...
நளினிக்கு ஜாமீன் வழங்கினால் தவறான முன்னுதாரணமாகி விடும்.. நளினிக்கு ஜாமீன் வழங்க காங்கிரஸ் எதிர்ப்பு...

By

Published : Mar 24, 2022, 8:14 AM IST

சென்னை:ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிய முந்தைய அதிமுக அரசு, அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தது. நீண்ட காலமாக அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்ததால், ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் தன்னை முன்கூட்டி விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சக கைதியான பேரறிவாளன் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. அந்த வழக்கில் முடிவு காணப்பட்ட பின் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கலாம் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்திருந்தது. இதனிடையே, (மார்ச் 22) இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நளினிக்கு ஜாமீன் வழங்க காங்கிரஸ் எதிர்ப்பு

அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக கூறி உத்தரவு நகலை சமர்ப்பித்தார். ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, அதே வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினியும், ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

நளினிக்கு ஜாமீன் வழங்க காங்கிரஸ் எதிர்ப்பு

நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டார். இதையடுத்து, எந்த மேல் முறையீட்டு வழக்கும் நிலுவையில் இல்லாத நிலையில் எந்த சட்டப்பிரிவின் கீழ் ஜாமீன் கோர முடியும் என நளினி தரப்புக்கு கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, குற்ற விசாரணை முறைச்சட்டத்தின் படி, முன் ஜாமீன் கோரலாம், கைது செய்யப்பட்டால் ஜாமீன் கோரலாம், தண்டிக்கப்பட்டால், தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் கோரலாம்.

நளினிக்கு ஜாமீன் வழங்க காங்கிரஸ் எதிர்ப்பு

ஆனால் மேல் முறையீட்டு வழக்கு ஏதும் இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் ஜாமீன் கோர முடியும் என்றார். உச்ச நீதிமன்றம் அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலானது, உயர் நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்க முடியாது என கூறிய தலைமை நீதிபதி, மனுதாரர் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை தான் அணுக முடியும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டமல்ல எனவும் தெரிவித்தனர். பின்னர், நளினி தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று மனு மீதான விசாரணையை மார்ச் 24 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

நளினிக்கு ஜாமீன் வழங்க காங்கிரஸ் எதிர்ப்பு

இந்நிலையில், நளினிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் முத்தழகன், நேற்று (மார்ச்.23) சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி, தொடர்ந்து நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுக்களைத் தாக்கல் செய்து வருவதாகவும், சுதந்திர இந்தியாவில் எந்த வழக்கிலும் எந்த கைதியும் இதுபோல் நீதிமன்றத்தை நாடியதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றம், பேரறிவாளனுக்கு மட்டும் தான் ஜாமீன் வழங்கியுள்ளதாகவும், அந்த உத்தரவு மற்ற கைதிகளுக்குப் பொருந்தாது எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரைக் கொன்ற இவர்கள், வெறும் கொலைக் குற்றவாளிகள் மட்டுமல்ல எனவும், இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்பு மற்றும் இந்திய அரசியல் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் கொலை வழக்கு இது எனவும் கூறியுள்ளார்.

இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் தவறான முன்னுதாரணமாகி விடும் எனவும், கைதிகளுக்கு ஆதரவாக மாநில அரசு வாதங்களை முன்வைக்கும் என்பதால் தன்னையும் இந்த வழக்கில் ஒரு தரப்பாகச் சேர்க்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இதனிடையே, இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க: அலைகடலில் மிதந்து வரும் தமிழீழ அகதிகள் - மீண்டும் திரும்புகிறதா வரலாறு?

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details