உத்தரப் பிரதேசத்தில் வன்முறையில் பாதிக்கப்பட்ட உழவரின் குடும்பத்தைக் காணச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கெரி மாவட்டம் லக்கிம்பூர் பகுதியில் காவல் துறையினரால் தடுக்கப்பட்டார். பின்னர் லக்னோவிலிருந்து 90 கி.மீ. தூரத்திலுள்ள சீதாபூரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
இதற்கு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி சென்னை, தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் காங்கிரஸ் கட்சியின் வட சென்னை மாவட்டத் தலைவர் திரவியம் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.