சென்னை:ஆர்.கே. நகர் அருகே மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டக்கங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எஸ்.திரவியம், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.