காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரக்குறைவாக விமர்சித்ததாகக் கூறி பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை இயக்குநரை சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பாக, மாநில தலைவர் அஸ்லாம் பாட்ஷா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மனு ஒன்று அளித்தனர்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் மனு அதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தனர். அவர்களின் கோரிக்கையை கேட்ட மனநல மருத்துவமனை இயக்குநர் பூர்ணசந்திரா, ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றால் அவரது நிலை குறித்து நீதிமன்றம் அல்லது காவல் துறையினரிடம் உரிய அனுமதி பெற்று வரவேண்டும் என்று பதிலளித்தார்.
மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் பேசினால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரின் அனுமதி பெற்று வழக்கறிஞர்கள் அணி மூலமாக நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் அவர்கள் கூறினர்.