தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’சட்டப்பேரவையில் கருணாநிதியின் படத்தை திறந்திருந்தால் அதிமுகவிற்கு மதிப்பு’ - Congress MLA Vijayadharani

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்திருந்தால் அதிமுகவிற்கு பெரும் மதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி தெரிவித்துள்ளார்.

vijayadharani congress  சட்டப் பேரவை உறுப்பினர் விஜயதாரணி  காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி  காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி செய்தியாளர் சந்திப்பு  Congress MLA Vijayadharani Press Meet  Congress MLA Vijayadharani  MLA Vijayadharani
Congress MLA Vijayadharani Press Meet

By

Published : Feb 24, 2021, 7:51 AM IST

Updated : Feb 24, 2021, 10:51 AM IST

டாக்டர்.பி. சுப்பராயன், ஓ.பி. ராமசாமி ரெட்டியார், வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் படங்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். சட்டப்பேரவையில் திறக்கப்பட்ட மூன்று பெருந்தலைவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

வ.உ.சியின் கொள்ளுப்பேத்தியும், கொள்ளுப்பேரனும் கூறுகையில், "வ.உ.சிக்கு மிக பெரிய பெருமையை அளிக்கக் கூடிய ஒரு நிகழ்வு மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார்கள். இதனால் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்" என்றனர்.

பி.சுப்பராயனின் கொள்ளுப்பேரன் கூறுகையில், "என் தாத்தா காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். அதிமுக அரசு அவருக்கு முழு உருவப்படத்தை சட்டப்பேரவையில் வைத்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது" எனக் கூறினர்.

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் தம்பி மகன் வெங்கடாசலபதி பேசுகையில், "எங்கள் தாத்தா காங்கிரஸ்காரராக இருந்தாலும் தமிழ்நாட்டை ஆண்ட அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் அவருக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். இதை செய்ததற்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கு நன்றி" என்றார்.

காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி கூறுகையில், "காங்கிரஸ் தலைவர்கள் இருவரின் படங்களை சட்டப்பேரவையில் திறந்துவைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவப் படத்தை திறந்திருந்தால் அதிமுகவிற்கு பெரும் மதிப்பு ஏற்பட்டிருக்கும். தற்போதைய அரசாங்கம் செய்யவில்லை என்றாலும் வர இருக்கக்கூடிய அரசாங்கம் உறுதியாக செய்யும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:ராஜிவ் காந்தி படுகொலை... என் அம்மாவையும் விட்டுவைக்கவில்லை: எம்.எல்.ஏ. விஜயதாரணி

Last Updated : Feb 24, 2021, 10:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details