தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறியதாகக் கூறி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பரப்புரைக்குத் தடைவிதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு பாஜக தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து கன்னியாகுமரி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணியிடம் கேட்கையில் "ராகுல் காந்தி பல்வேறு மக்களை பரப்புரையின்போது சந்தித்துள்ளார்.
பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலரையும் சந்தித்துள்ளார். தேர்தல் பரப்புரை மேற்கொள்ளாத இடங்களில் கட்சியினருடனான சந்திப்புகளை மேற்கொண்டுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, விதிமுறைகளை மீறியதற்கான எந்தவொரு முகாந்திரமும் இல்லை.
இதுபோன்று எதிர்மறையான கருத்துகளை ராகுல் காந்திக்கு எதிராக பயன்படுத்துவதையும், வெறுப்பை மக்களிடத்தில் திணிப்பதையும் பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும். பாரத பிரதமரோ, மாநில பாஜக தலைவரோ மக்களை சந்திப்பதில்லை.