சென்னை:கோடநாடு கொலை, கொள்ளை விவாகரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கவேண்டும் என காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவைத் தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வரக்கோரி மனு அளித்துள்ளார்.
இதற்கு பேரவைத் தலைவர் அனுமதியளிக்காத நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், , இந்த விவாகரம் குறித்து விவாதிக்க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரக்கூடாது எனவும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், கோடநாடு விவகாரம் என்றாலே அதிமுக தலைவர்கள் ஏன் இவ்வளவு பதறுகிறார்கள்? ஏன் இவ்வளவு அஞ்சுகிறார்கள் என காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவைத் தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "அதிமுக தலைவர்கள் ஊடகத்தைச் சந்தித்து கோடநாடு விவகாரம் குறித்து பேட்டியளிக்கிறார்கள், ஆளுநரைச் சந்தித்து மனு அளிக்கிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதிமுகவினர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஏன் ஈடுபடவேண்டும்.