சென்னை:ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த மார்ச் 15 ஆம் தேதி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தீவிர சிகிச்சைக்கு பிறகு கடந்த வாரம் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்ச்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காரணத்தினால் தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அவரால் கலந்துக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
மருத்துவமனையில் இருந்து டிஸ்ச்சார்ஜ் செய்யப்பட்டு தனது இல்லத்தில் ஓய்வில் இருந்த ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈ .வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த 12 ஆம் தேதி சட்டமன்றத்திற்கு வருகை தந்தார். சிறிது நேரம் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற அலுவலகத்தில் அமர்ந்து இருந்த அவர் சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்பு மீண்டும் தனது இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்.