தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் சமூக ஊடகத்தில் இணையுங்கள்'! - புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரி: ஜனநாயகத்தை காப்பாற்ற காங்கிரஸ் பேரியக்கத்தின் 'சமூக ஊடகத்தில் இணையுங்கள்' என்ற புதிய பரப்புரை திட்டம் புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் தொடங்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன்
காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன்

By

Published : Feb 11, 2021, 12:11 PM IST

புதுச்சேரி வைசியாள் வீதியில் அமைந்துள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் சமூக ஊடகத் துறை பரப்புரை இயக்கத்தை காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். இதில் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில்,

"மத்தியில் பாஜக அரசு பொருளாதாரம், வேலைவாய்ப்பு, பெண்கள் மேம்பாடு என அனைத்துத் துறைகளிலும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிராக அதிகரித்துவரும் கோபத்தை காண முடிகிறது.

ஏராளமான மக்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக குரல் கொடுப்பதை பார்க்கிறோம்.

இந்த எதிர்ப்புக் குரல்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மோடி அரசு இறங்கியுள்ளது. நாடு முழுவதும் சிதறி ஒலிக்கும் காங்கிரஸ் ஆதரவாளர்களின் குரல்களை ஒரே குடையின்கீழ் ஒழுங்குபடுத்த வேண்டும்.

இதை மனத்தில் வைத்தே ‘காங்கிரஸ் சமூக ஊடகத்தில் இணையுங்கள்’ என்ற பரப்புரையை காங்கிரஸ் சமூக ஊடகத் துறை தொடங்கியுள்ளது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம், சுதந்திரத்தைப் பாதுகாக்கப் போராட விரும்புவோரை இந்தப் பரப்புரையில் இணைக்க முடிவெடுத்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஒடிசாவில் கடை அடைப்புக்கு காங்கிரஸ் அழைப்பு!

ABOUT THE AUTHOR

...view details