சென்னை:தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு சரிபார்ப்பு முடிவடைந்த நிலையில், தங்களது கட்சி, கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், திமுக கூட்டணியில் 25 தொகுதிகளைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள், கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருகைதருகிறார்.