சமூக வலைதளங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசிய காணொளி ஒன்று தற்போது வேகமாகப் பரவிவருகிறது. காணொளியில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் திருமாவளவன் கருத்துகளை வெளியிட்டதாக, பல்வேறு தரப்பினர் அவரின் பேச்சுக்கு கண்டனமும், ஆதரவும் தெரிவித்துவருகின்றனர்.
இதுதொடர்பாக, அவர் மீது கலகம் செய்தல், உணர்வுகளைத் தூண்டிவிட்டு கலவரம் செய்ய முயற்சித்தல், மதத்தினரிடையே கலவரத்தை உருவாக்குதல், மத உணர்வுகளைப் புண்படுத்துதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்து, பல அரசியல் கட்சியினர் குரல் கொடுத்துவருகின்றனர்.