தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அறிவிப்பின்றி வாக்கு இயந்திரங்கள் மாற்றம்: தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார்! - congress give petition to Sathya Pratha Sahoo

சென்னை: நாங்குநேரியில் வைக்கப்பட்டிருந்த 30 மின்னணு வாக்கு இயந்திரங்களை முறையான அறிவிப்பு இல்லாமல் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றிய தேர்தல் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

congress-g-r-damodaran

By

Published : Oct 15, 2019, 9:45 PM IST

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் ஆர். தாமோதரன், "நாங்குநேரி இடைத்தேர்தலுக்காக நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 30 மின்னணு வாக்கு இயந்திரங்கள் கடந்த 12ஆம் தேதி நள்ளிரவில் வாகனம் ஒன்றின் மூலம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகாரளித்த ஆர். தாமோதரன்

இது குறித்து வேட்பாளருக்கோ அல்லது காங்கிரஸ் கட்சியின் தலைமைத் தேர்தல் முகவருக்கோ எந்தவித முன்னறிவிப்பும் செய்யப்படவில்லை. மேலும், எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்காமல் 30 மின்னணு இயந்திரங்கள் சந்தேகத்திற்கிடமாக மாற்றப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிமுறைகளுக்கு மாறானது. எனவே சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: ராஜிவ் காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனின் பரோல் குறித்து உள் துறை அமைச்சகம் முடிவெடுக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details