நவம்பர் முதல் வாரம் பாஜக நடத்த இருக்கும் வெற்றிவேல் ரத யாத்திரையை தடை செய்யக் கோரி, தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் அறியும் உரிமை சட்டக்குழு, சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல் துறை தலைமை அலுவலகம் சென்னை, காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் உள்துறை செயலர் அலுவலகத்தில் புகார் மனுக்கள் அளித்துள்ளது.
புகார் மனுக்கள் அளித்ததைத் தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் அறியும் உரிமை சட்டக்குழு தலைவர் கனகராஜ், ”பாஜகவினரின் ரத யாத்திரை என்பதே மதக்கலவரத்தைத் தூண்டும் விதத்தில் செயல்படும் ஒன்றாகும். அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டை போர்க்களமாக மாற்ற முயற்சிக்கின்றனர்.