சென்னை மெரினா கடற்கரையில் பலூன் வியாபாரம் செய்துவருபவர் ரந்தோஷ். அவரது மனைவி போஸ்லே. இவர்களின் ஏழு மாத ஆண் குழந்தையை சினிமாவில் நடிக்கவைப்பதாகக் கூறிய பெண் ஒருவர், அவர்களை கடந்த 12ஆம் தேதி ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு வரவழைத்து அங்கிருந்து குழந்தையை கடத்திச்சென்றார்.
அதைத்தொடர்ந்து குழந்தையை கடத்திய பெண்ணைப் பற்றி எழும்பூர் மருத்துவமனை செவிலி ஜூலியட் அளித்த தகவலின்பேரில் குழந்தை தீவிரமாகத் தேடப்பட்டுவந்தது. அதையடுத்து எட்டு நாள்களுக்குப் பின் எழும்பூர் மருத்துவமனை வளாகத்தில் கடத்திய பெண் கைதுசெய்யப்பட்டு குழந்தை மீட்கப்பட்டது. கடத்திய பெண்ணின் பெயர் தேவி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குழந்தையை கடத்திச்சென்ற பெண்ணைப் பற்றி தகவலளித்த செவிலி ஜூலியட்டை சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.
கடந்த 18ஆம் தேதி குழந்தையை கடத்திய பெண்ணின் புகைப்படம், சிசிடிவி காட்சியை காண்பித்தபோது அதைப்பற்றி காவலர்களிடம் கூறியதையும் தெரிவித்தார்.
சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித்திரிந்த பெண்ணை ரோந்துப் பணியிலிருந்த காவலர் விசாரிக்கையில் அவர் சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சினிமாவில் நடிக்கவைப்பதாக ஆசைவார்த்தைக் கூறி குழந்தையை கடத்திய பெண்!