தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனவுகள் நிறைவேறட்டும் - நடராஜனை வாழ்த்திய ஸ்டாலின் - சேலத்து யார்க்கர் புயல்

சென்னை: இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியுள்ள சேலத்து யார்க்கர் புயல் நடராஜனுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

கனவுகள் நிறைவேறட்டும்- நடராஜனை வாழ்த்திய ஸ்டாலின்
கனவுகள் நிறைவேறட்டும்- நடராஜனை வாழ்த்திய ஸ்டாலின்

By

Published : Nov 10, 2020, 5:56 PM IST

ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் 2020 தொடரில் இந்திய அணி வீரர்கள் தற்போது விளையாடி வருகின்றனர். இந்த தொடரின் இறுதிப் போட்டி இன்று (நவம்பர் 11) நடைபெறுகிறது.

ஐபிஎல் 2020 தொடருக்கு பின் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டி, மூன்று டி20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடயுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் முதல் ஒரு நாள் போட்டி நவம்பர் 27ஆம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் கூடுதல் வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்தார். ஆஸ்ரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிமுக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு தோளில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக மற்றொரு தமிழ்நாடு வீரரான நடராஜன் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணியில் தேர்வாகியுள்ள நடராஜனுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடராஜனை வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார்.

அதில், “இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியுள்ள சேலத்து யார்க்கர் புயல் நடராஜனுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்! நடராஜன் உடன் பேசினேன். அவர் உயர்வுகளைப் பெறவும், வெற்றிகள் குவித்து, அணிக்கு பெருமை சேர்க்கவும் எனது விருப்பங்களை தெரிவித்தேன்! அனைத்துக் கனவுகளும் நிறைவேறட்டும்!“ என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details