தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கிடுக!’ - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு - கரோனா அச்சுறுத்தல்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 22ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கை முன்னிட்டு, சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு சமூக நல கூடங்களில் தங்கும் வசதியும், உணவும் வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

court
court

By

Published : Mar 20, 2020, 3:07 PM IST

கரோனா பாதிப்பைத் தவிர்க்கும் வகையில் வரும் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மக்கள் எவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும் எனவும், அன்றைய தினம் மொதுமக்கள் ஊரடங்கு நடைமுறையை பின்பற்ற வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், சென்னையில் வீடில்லாமல் 9 ஆயிரம் பேர் வரை சாலையோரம் வசித்து வருவதால் ஊரடங்கு அன்று அவர்களை மாநகராட்சி சமுதாய நலக் கூடங்களில் தங்க அனுமதித்து, உணவு வழங்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் சூரியபிரகாசம், நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அமர்வில் முறையிட்டார்.

அப்போது, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர், ஊரடங்கு தினத்தன்று, சாலையோரம் வசிக்கும் வீடில்லாத மக்கள், மாநகராட்சி சமுதாய நலக் கூடங்களில் தங்க வைக்கப்படுவர் என தெரிவித்தார்.

இதை அடுத்து, அவர்களுக்கு உணவும் வழங்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தேவைப்படும் பட்சத்தில் தனியார் திருமண மண்டபங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவு அறிவுறுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details