தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவிட்-19 பாதிப்பு: தமிழ்நாட்டில் 8 ஆயிரத்தைத் தாண்டியது! - covid-19 latest news in tamil nadu

சென்னை: இன்று புதிதாக 798 பேர் தமிழ்நாட்டில் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 2ஆக உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

chennai corona
chennai corona

By

Published : May 11, 2020, 8:39 PM IST

Updated : May 11, 2020, 9:29 PM IST

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 53 ஆய்வகங்களில் 11 ஆயிரத்து 862 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், இன்று மட்டும் 798 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்து இரண்டாக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 514 ஆண்களும், 284 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2 லட்சத்து 54 ஆயிரத்து 899 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த 92 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 2 ஆயிரத்து 59 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 895 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் கோவிட்-19ஆல் ஆறு பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 36 வயது பெண்மணி, 50 வயது ஆண், 67 வயது பெண்மணி, 32 வயது பெண் ஆகியோரும், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 66 வயது பெண்மணி, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது பெண்மணி ஆகியோர் இப்பெருந் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கோவிட்-19 பாதிப்பு இன்று அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 538 பேருக்கும், திருவள்ளூரில் 97 பேருக்கும், செங்கல்பட்டில் 90 பேருக்கும், அரியலூரில் 33 பேருக்கும், திருவண்ணாமலையில் 10 பேருக்கும் என 798 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம் பின்வருமாறு

வரிசை எண் மாவட்டங்கள் பாதிப்பு
1 சென்னை 4,371
2 திருவள்ளூர் 440
3 கடலூர் 395
4 செங்கல்பட்டு 356
5 அரியலூர் 308
6 விழுப்புரம் 299
7 கோயம்புத்தூர் 146
8 காஞ்சிபுரம் 132
9 மதுரை 121
10 திருப்பூர் 112
11 திண்டுக்கல் 109
12 பெரம்பலூர் 105
13 திருவண்ணாமலை 92
14 திருநெல்வேலி 90
15 நாமக்கல் 76
16 ஈரோடு 70
17 தஞ்சாவூர் 69
18 ராணிப்பேட்டை 67
19 திருச்சி 65
20 தேனி 59
21 கள்ளக்குறிச்சி 58
22 தென்காசி 52
23 கரூர் 48
24 நாகப்பட்டினம் 45
25 விருதுநகர் 40
26 சேலம் 35
27 தூத்துக்குடி 33
28 வேலூர் 33
29 திருவாரூர் 32
30 ராமநாதபுரம் 30
31 திருப்பத்தூர் 28
32 கன்னியாகுமரி 25
33 கிருஷ்ணகிரி 20
34 நீலகிரி 13
35 சிவகங்கை 12
36 புதுக்கோட்டை 6
37 தருமபுரி 6
Last Updated : May 11, 2020, 9:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details